- T@mil elta etwrk -


 
HomeHome  Portal*Portal*  GalleryGallery  FAQFAQ  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 THIRUKKURAL -- porutpaal

View previous topic View next topic Go down 
AuthorMessage
Baskar
T'$pace Admin
T'$pace Admin


Male
Number of posts : 1306
Age : 30
Location : UK ( J Town Best Place in da world)
Job/Studies : STUDENT
Language : Tamil & English
Registration date : 2007-12-09

Character sheet
Gold: 10 BILLION
Nick name: FBEB

PostSubject: THIRUKKURAL -- porutpaal   Mon Mar 10, 2008 2:07 pm

porutpaal - arasiyal - iRaimaatchi

381.padaikudi kuuzhamaichchu natparaN aaRum
udaiyaan arasaru LERu.

aaRRal migu padai, aRivaarntha kudimakkaL , kuRaiyaa vaLam , kuRaiyaRRa amaichchu, muripadaatha natpu, mOdhiyazhikka mudiyaadha araN aagiya aaRu siRappugaLum udaiyathE arasugaLukkidaiyE aaN singgam pOnRa arasaagum.

382.anjchaamai iigai aRivuukkam i-n-naankum
enjchaamai vEnthaR kiyalbu.

thuNivu, irakka sinthai aRivaaRRal, uyarntha kuRikkOLai ettum muyaRchi aagiya naanku paNbugaLum arasukkuriya thaguthigaLaam.

383.thuunggaamai kalvi thuNaivudaimai ammuunRum
-niinggaa nilanaaL bavarku.

kaalam thaazhththaatha viraivaana nadavadikkaigaLum, aRivudaimaiyum, thuNivum naadaaLuginRavargaLukkuth thEvaiyaanathaagum, niinggaamal nilaiththirukka vENdiyavaiyumaana paNbugaLaagum.

384.aRanizhukkaa thallavai niikki maRanizhukkaa
maana mudaiya tharasu.

aRaneRi thavaRaamalum, kuRRamEdhum izhaikkaamalum, viiraththudanum , maanaththudanum aatchi nadaththubavargaLE siRanthavargaLaavaargaL.

385.iyaRRalum iittalung kaaththalung kaaththa
vaguththalum valla tharasu.

muRaiyaaga nithi aathaaranggaLai vaguththu , arasaangga karuvuulaththiRkaana varuvaayai perukki , athai paadhukaaththuth thittamittuch chelaviduvathu thaan thiRamaiyaana nallaatchikku ilakkaNamaagum.

386.kaatchi keLiyan kadunjchollan allanEl
miikkuuRum mannan nilam.

kaatchikku eLimaiyum kadunjchol kuuRaatha iniya paNpaadum udaiya arasaiththaan ulagam pugazhum.

387.insolaal iiththaLikka vallaaRkuth thansolaal
thaankaN danaiththiv vulagu.

vaakkil inimaiyum, piRarkku vazhanggi kaaththidum thanmaiyum koNdavarkku ivvaiyagamE vasappadum.

388.muRaiseythu kaappaaRRum mannavan makkat
kiRaiyenRu vaikkap padum.

-niithi neRiyudan arasu nadaththi makkaLaik kaappaaRRum aatchiyaaLan thaan makkaLukku thalaivan enRu pORRappaduvaan.

389.sevigaippach soRpoRukkum paNbudai vEnthan
kavigaikkiizhth thanggu mulagu.

kaathaik kudaiyak kuudiya kadunjchollaiyum poRuththukkoLLakkuudiya paNbaaLarudaiya arasukku thaan
makkaLidam madhippu irukkum.

390.kodaiyaLi senggOl kudiyOmbal naankum
udaiyaanaam vEnthark koLi.

nalavaazhvukku vENdiyavaRRai vazhanggiyum , nilaiyuNarnthu karuNai kaattiyum, nadunilai thavaRaamal aatchi nadaththiyum, makkaLaip pENik kaappathE Or arasukkup pugazhoLi sErppathaagum.
__________________
Back to top Go down
View user profile
Baskar
T'$pace Admin
T'$pace Admin


Male
Number of posts : 1306
Age : 30
Location : UK ( J Town Best Place in da world)
Job/Studies : STUDENT
Language : Tamil & English
Registration date : 2007-12-09

Character sheet
Gold: 10 BILLION
Nick name: FBEB

PostSubject: Re: THIRUKKURAL -- porutpaal   Mon Mar 10, 2008 2:07 pm

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

381.படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.

ஆற்றல் மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள் , குறையா வளம் , குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

382.அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

துணிவு, இரக்க சிந்தை அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாம்.

383.தூங்காமை கல்வி துணைவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்கு.

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானதாகும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

384.அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.

அறனெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும் , மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

385.இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து , அரசாங்க கருவூலத்திற்கான வருவாயை பெருக்கி , அதை பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவது தான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

386.காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

387.இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கி காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

388.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

நீதி நெறியுடன் அரசு நடத்தி மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன் தான் மக்களுக்கு தலைவன் என்று போற்றப்படுவான்.

389.செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

காதைக் குடையக் கூடிய கடுஞ்சொல்லையும் பொறுத்துக்கொள்ளக்கூடிய பண்பாளருடைய அரசுக்கு தான்
மக்களிடம் மதிப்பு இருக்கும்.

390.கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும் , நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுனிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
__________________
Back to top Go down
View user profile
Baskar
T'$pace Admin
T'$pace Admin


Male
Number of posts : 1306
Age : 30
Location : UK ( J Town Best Place in da world)
Job/Studies : STUDENT
Language : Tamil & English
Registration date : 2007-12-09

Character sheet
Gold: 10 BILLION
Nick name: FBEB

PostSubject: Re: THIRUKKURAL -- porutpaal   Mon Mar 10, 2008 2:10 pm

porutpaal - arasiyal - kalvi

391. kaRka kasadaRak kaRpavai kaRRapin
-niRka athaRkuth thaga.

pizhal illaathavaRRaith thanathu kuRaigaL niinggumaLavukku kaRRukkoLLa vENdum. kaRRa piRagu athanpadi nadakkavENdum.

392.eNNenba Enai ezhuththenba ivviraNdum
kaNNenba vaazhum uyirkku.

eNNum ezhuththum enappadum aRivuk kaNgaLaip peRRavargaLE , uyir vaazhvOr enak karuthappaduvaargaL.

393.kaNNudaiyar enbavar kaRROr mugaththiraNdu
puNNudaiyar kallaa thavar.

kaNNillaavidinum avar kaRRavaraaga iruppin kaNNudaiyavaraagavE karuthappaduvaar.kallaathavarukkuk kaN iruppinum athu puN enRE karuthappadum.

394.uvalppath thalaikkuudi uLLap pirithal
anaiththE pulavar thozhil.

magizhchchi ponggida sErnthu pazhaguvathum, pirinthida nErumbOdhu mananggalangguvathum aRiviR siRanthOr seyalaagum.

395.udaiyaarmun illaarpOl EkkaRRung kaRRaar
kadaiyarE kallaa thavar.

aRivudaiyaar mun aRivillaathavar pOl thaazhnthu ninRu , mElum kaRRukkoLbavargaLin aarvaththaik kaRRuk koLLaathavargaL kadainilai maantharaaga karuthappaduvaargaL.

396.thottanaith thuuRum maNaRkENi maantharkkuk
kaRRanaith thuuRum aRivu.

thONdath thONda uuRRu niir kidaippathu pOlath thodarnthu padikkap padikka aRivu perugik koNdE irukkum.

397.yaathaanum naadaamal uuraamaal ennoruvan
saanthuNaiyung kallaatha vaaRu.

kaRROrkku ellaa naadugaLilum ellaa uurgaLilum siRappu enggiRabOdhu , oruvan saagum varaiyil kaRkaamal kaalam kazhippathu EnO?

398.orumaikkaN thaankaRRa kalvi oruvaRku
ezhumaiyum Emaap pudaiththu.

oru thalaimuRaiyil peRum kalvi aRivaanathu, EzhEzhu thalaimuRaikkum paathukaappaaga amaiyum.

399.thaamin puRuvathu ulagin puRakkaNdu
kaamuRuvar kaRRaRinth thaar.

thamakku inbam tharuginRa kalviyaRivu ulagaththaarukkum inbam tharuvathaik kaNdu, aRinjargaL mElum mElum palavaRRai kaRRida virumbuvaargaL.

400.kEdil vizhuchchelvam kalvi yoruvaRku
maadalla maRRai yavai.

kalvi onRE azhivaRRa selvamaagum . athaRkoppaana siRantha selvam vERu Ethum illai.
__________________
Back to top Go down
View user profile
Baskar
T'$pace Admin
T'$pace Admin


Male
Number of posts : 1306
Age : 30
Location : UK ( J Town Best Place in da world)
Job/Studies : STUDENT
Language : Tamil & English
Registration date : 2007-12-09

Character sheet
Gold: 10 BILLION
Nick name: FBEB

PostSubject: Re: THIRUKKURAL -- porutpaal   Mon Mar 10, 2008 2:10 pm

பொருட்பால் - அரசியல் - கல்வி

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பிழல் இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்கு கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

392.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே , உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

393.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

394.உவல்ப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மகிழ்ச்சி பொங்கிட சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும்போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

395.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று , மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைனிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

396.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

தோண்டத் தோண்ட ஊற்று நீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

397.யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு எங்கிறபோது , ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

399.தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றை கற்றிட விரும்புவார்கள்.

400.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் . அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு ஏதும் இல்லை.
__________________
Back to top Go down
View user profile
Baskar
T'$pace Admin
T'$pace Admin


Male
Number of posts : 1306
Age : 30
Location : UK ( J Town Best Place in da world)
Job/Studies : STUDENT
Language : Tamil & English
Registration date : 2007-12-09

Character sheet
Gold: 10 BILLION
Nick name: FBEB

PostSubject: Re: THIRUKKURAL -- porutpaal   Mon Mar 10, 2008 2:11 pm

porutpaal - arasiyal - kallaamai

401.arangginRi vaattaadi yaRRE nirambiya
-nuulinRik kOtti koLal.

-niRaintha aRivaaRRal illaamal avaiyil pEsuvathu aaduvathaRkaana kattam pOttuk koLLaamalE sokkattaan viLaiyaaduvathaip pOnRathaagum.

402.kallaathaan soRkaa muRuthal mulaiyiraNdum
illaathaan peNkaamuR RaRRu.

kallaathavanin solkEtka virumbuvadhu , maarbagam illaadha peNmiidhu maiyal koLvathaRku oppaanathu.

403.kallaa thavarum nani-nallar kaRRaarmun
sollaa thirukkap peRin.

kaRRavargaLin munnilaiyil ethuvum pEsaamal irukkak kaRRirunthaal kalvi kaRkaathavargaL kuuda nallavargaLaagavE karuthappaduvaargaL.

404.kallaathaan otpam kazhiya-nan Raayinum
koLLaar aRivudai yaar.

kalvi kaRkaathavanukku iyaRkaiyaagavE aRivu irunthaalum kuuda, avanaik kalviyil siRanthOn enRu aRivudaiyOr oppukkoLLa maattaargaL.

405.kallaa oruvan thagaimai thalaippeythu
sollaadach chOrvu padum.

kalviyaRivillaathavargaL thanggalaip periya mEdhaigaL pOla kaattikkoLLum pOli vEdam , kaRRu thErntha aRinjargaLidam avargaL uraiyaadumbOdhu kalainthu pOyvidum.

406.uLarennum maaththiraiyar allaal payavaak
kaLaranaiyar kallaa thavar.

kallaathavargaLaik kaLar nilaththukku oppiduvathE poruththamaanadhu. kaaraNam avargaL veRum nadaip piNanggaLaagavE karuthappaduvar.

407. nuNmaaN nuzhaipulam illaan ezhil-nalam
maNmaaN punaipaavai yaRRu.

azhagaana thORRam mattumE irunthu, aazhnthu theLintha aRivillaamal iruppavargaL, kaNNaik kavarum maN pommaiyai pOnRavargaLaagavE madhikkappaduvaargaL.

408. nallaarkaN patta vaRumaiyin innaathE
kallaarkaN patta thiru.

muttaaLgaLidam kuvinthuLLa selvam, nallavargaLai vaattum vaRumaiyaivida athiga thunbaththai tharum.

409.mERpiRanthaa raayinum kallaathaar kiizhppiRanthum
kaRRaar anaiththilar paadu.

kaRRavar enRa perumai, uyarnthavar thaazhnthavar enRa vERupaattai pOkkividum.

410.vilangkodu makka Lanaiyar ilanggu-nuul
kaRRaarOdu Enai yavar.

manithargaLukkum vilanggugaLukkumidaiyE enna vERRumaiyO , athE aLavu vERRumai aRivu nuulgaLaip padiththavargaLukkum, antha nuulgaLaip padikkaathavargaLukkum idaiyE uNdu
__________________
Back to top Go down
View user profile
Baskar
T'$pace Admin
T'$pace Admin


Male
Number of posts : 1306
Age : 30
Location : UK ( J Town Best Place in da world)
Job/Studies : STUDENT
Language : Tamil & English
Registration date : 2007-12-09

Character sheet
Gold: 10 BILLION
Nick name: FBEB

PostSubject: Re: THIRUKKURAL -- porutpaal   Mon Mar 10, 2008 2:12 pm

பொருட்பால் - அரசியல் - கல்லாமை

401.அரங்கின்றி வாட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

402.கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற் றற்று.

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது , மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

403.கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள் கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

404.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும் கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

405.கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்வியறிவில்லாதவர்கள் தங்கலைப் பெரிய மேதைகள் போல காட்டிக்கொள்ளும் போலி வேடம் , கற்று தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

406.உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர்களைக் களர் நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப் பிணங்களாகவே கருதப்படுவர்.

407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையை போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தை தரும்.

409.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை போக்கிவிடும்.

410.விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ , அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.
__________________
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: THIRUKKURAL -- porutpaal   

Back to top Go down
 
THIRUKKURAL -- porutpaal
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
- T@mil elta etwrk - :: General Talk :: Tamilz Corner-
Jump to: